Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Friday, October 14, 2011

புதிய மதிப்பீடு தேவையா?

புதிய மதிப்பீடு தேவையா?

எட்டையபுரத்துக் கவிஞன் பாரதி மகாகவியா? என்ன யோசிக்கிறீர்கள். மீண்டும் அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டோமோ, வ.ரா. கல்கி இவர்களுக்கிடையே நடந்த "பாரதி மகாகவியா?" எனும் விவாதம் குறித்து பேசுகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறதா? இல்லை, சமீபத்தில் இப்படியொரு சர்ச்சையைச் சிலர் தொடங்கி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், தங்கள் மேதா விலாசத்தை வெளிக்காட்டிச் சொற்களை வளைத்து வளைத்து எழுதி பாரதியை உருமாற்றிக் காட்ட முயற்சிகளைச் செய்தாலும் பாரதி மகாகவியே. அதில் எள்ளத்தனை சந்தேகமும் தேவையில்லை; அப்படி சொல்வோரது பேச்சுக்களைக் கேட்க வேண்டியதில்லை.

எனக்குத் தெரிந்து கடிகாரம் பழுது பார்ப்பவர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை வராத நாளில் ஏதாவது ஒரு கடிகாரத்தை எடுத்துப் பிரித்து மறுபடி பூட்டி ஓடவைத்துக் கொண்டிருப்பார். அப்படிப்பட்ட பழுது பார்ப்பவர் சிலர் இப்போது மகாகவி பட்டம் பாரதிக்கு ஏற்றதா இல்லையா என்பதை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் படித்து விட்டாலும், பலரும் இவர்களை அறிவாளிகள் என்று சொல்லிவிட்டதாலும் ஏற்படுகின்ற கோளாறு இது. என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள். உங்கள் கருதுக்களை. "பாரதி மகாகவியா" என்பது பற்றி அல்ல! இதுபோன்ற விமர்சனங்கள் தேவையா என்பது பற்றி. முடிந்தால் பாரதிக்குப் பெருமை சேர்க்க முயற்சி செய்யுங்கள். அவனைக் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.

1 comment:

  1. கல்கி,வரா விவாதமே பார‌தியைப் பர‌வச் செய்ய, எல்லோரும் பாரதியை உற்று நோக்கச் செயப்பட்ட யுக்தி என்ற எண்ணம் உண்டு.அது போல இப்போது ஜெமோ நடத்துவதும் பாரதியைப் பலரும் பயில வைக்கலாம்.

    இன்றைய‌ காலகட்டத்தில் பிகாசோ ஓவியம் போல கவிதை இருக்க வேண்டும். அல்ல‌து யாஹவா முனிவரின் மொழியில் இருக்க வேண்டும். அப்போதுதான் கவிதை என்றே பார்க்கப்படும். யாரும் கடவுள் ஆன்மீகம் என்று எழுதிவிடகூடாது.

    அங்கே ஒருவன்
    பேருந்து
    ஏறினான்.

    ஒருவன் குட்டிச்சுவர்
    நிலையம்
    ஈரம்

    மல்லிகை
    பூக்காரி
    கட்கம்
    கிழிசல்

    ஒரு முழம் பூ
    வாசம்
    ஒன்றுக்கு
    வாசம்

    முதலிரவு
    அவனுக்கு
    அப்படி.

    இதற்கு வியாக்கியானம் எழுதி, அந்தக் கவிஞனுக்கு இலக்கிய‌ நோபல் பரிசு கொடுக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள்.

    பாரதியாவது ஒன்றாவது!

    ReplyDelete

You can send your comments