நாள் காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒரு தேதியைக் கிழிக்கிறோம். மாதாந்திர நாள் காட்டியில் ஒவ்வொரு மாதமும், ஆண்டுக்கொரு முறை புதிய ஆங்கில ஆண்டு பிறக்கிறது. எந்த நாளும் நல்ல நாளாக இருக்க வேண்டும். அது போன்றே புதிதாய்ப் பிறக்கிற ஆண்டும் நமக்கு நல்லதைச் செய்ய வேண்டும். அதற்காக நமது புருனெய் தனுசு அவர்கள் எழுதியிருக்கும் இந்தக் கவிதை நமக்கெல்லாம் நன்மையைக் கொண்டு வந்து தரவேண்டும்.
இனிய 2012 புதிய ஆண்டே வருக!
விடியும் விடியலுக்கு வாழ்த்துக்கள்
+++++++++++++++++
புத்தாண்டின் விடியலிலே
புது பாதை தேடும் என்தோழா- உனக்கான
முகவரிகள் செய்யும் பொழுதினிலே ...
முட்டுக்கட்டை போடும்-எந்த
முகம்தெரியா தடைகண்டும்
மூச்சடைத்து நிற்காதே. உன் பார்வையை மாற்றாதே.
நித்தமும் தடைகள்.
மொத்தமும் தோல்விகள் .
எதிலும் ஏமாற்றங்கள்.
இந்த வேதனை எனும் சோதனையை
நீ சோதித்தால்
அவைசொல்லாமல் ஓடிவிடும்.
விடாமுயற்சி எனும் சூத்திரங்கள்
தெரிந்து கொண்டால்
பாதைகள் பணிந்துவிடும்.
உன்னை சூழும் நெருப்பை-நீ
அள்ளிப் போட்டு தின்றால் -அங்கோர்
உலகம் உன்னைக் கண்டு உதித்துவிடும் .
எண்ணித் துணிந்தால் கருமம் .
உன்னுள் தேவை வன்மம்-இருந்தால்
ஜெயமே இந்த ஜென்மம்.
- புருனெய் தனுசு-
வாழ்க வளமுடன்
ReplyDeleteவாழ்க வளமுடன்
ReplyDeleteபாரதியின் புகழை புயலென பரப்பும் உங்கள் பனி எங்களுக்கு ஊக்கத்தை தருகின்றது , நீங்கள் எங்களுக்கொரு மிகசிறந்த வழிகாட்டி
ReplyDeleteதமிழ் தாமரை VM . வெங்கடேஷ்
editor ; http://www.tamilthamarai.com