திருவையாறு பாரதி விழாவில் நூல்கள் வெளியீடு
மகாகவி பாரதியாரின் 90ஆம் ஆண்டு நிறைவு விழாவும், பாரதி இலக்கியப் பயிலகத்தின் 10ஆம் ஆண்டு விழாவும் திருவையாறு சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. விழாவையொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த 'கருத்தரங்க'த்தில் பாரதி குறித்த பல்வேறு தலைப்புகளில் இருபத்தைந்து பேர் தங்கள் கட்டுரைகளை வாசித்தளித்தார்கள். மூன்று அமர்வாக நடைபெற்ற கருத்தரங்கின் முதல் அரங்கு தில்லைத்தானம் அ.இராமகிருஷ்ணன் தலைமையிலும், இரண்டாம் அமர்வு பி.இராஜராஜன் தலைமையிலும், மூன்றாம் அமர்வு இரா.மோகன் தலைமையிலும் நடைபெற்றது.
பிற்பகல் நான்கு மணிக்கு அரசு இசைக் கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட 'பாரதி இசை அரங்கம் நடைபெற்றது. இதற்கு இசைக் கல்லூரி முதல்வர் உமாமகேசுவரி தலைமை தாங்கி நடத்தினார்.
பின்னர் நடந்த நிறைவு விழாக் கூட்டத்தில் தஞ்சை பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனர் வெ.கோபாலன் எழுதிய "பாரதி போற்றிய பெரியோர்கள்" எனும் நூலையும் பிரேமா அரவிந்தன் எழுதிய "விடுதலைக்கு வித்திட்ட வீரத் தலைவர்கள் எனும் நூலையும் சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதல் நூலைப் பெற்றுக் கொண்ட முனவர் இராம கெளசல்யாவும், தி இந்து பத்திரிகையின் சிறப்பு நிருபர் ஜி.சீனிவாசன் அவர்களும் நூலைச் சிறப்பித்துப் பேசினர். பட்டுக்கோட்டை பிரேமா அரவிந்தன் எழுதிய இரண்டாவது நூலை பெற்றுக் கொண்ட முனைவர் சாமி செல்வகணபதி நூலைப் பற்றி சிறப்புரையாற்றினார்.
நூல்களை வெளியிட்ட சென்னை கோமுகி பதிப்பகத்தின் அதிபர் திரு கி.முத்தையன் அனைவரையும் வரவெற்றுப் பேசினார். விழா ஏற்பாடுகளை திருவையாறு பாரதி இயக்கத்தின் பிரேமசாயி, பி.இராஜராஜன், இரா.மோகன், நீ.சீனிவாசன், இரா.சீனிவாசன், பாரத் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவில் தலைவர் நீ.சீனிவாசன் நன்றி கூறினார்.
வரவேற்புரை வெ.கோபாலன்
நூலாசிரியர் உரை
பாரதி இயக்க அறங்காவலர் பி.இராஜராஜன்
இறைவணக்கம் இசைக்கல்லூரி மாணவியர்
'பாரதி' இசை அரங்கு இசைக்கல்லூரி மாணவியர்
நூல் வெளியீடு சேக்கிழாரடிப்பொடி
முனைவர் தி.ந.இராமச்சந்திரன்
பெறுபவர்: முனைவர்
இராம.கெளசல்யா, முன்னாள்
முதல்வர், இசைக்கல்லூரி,
திருவையாறு
நூலைப் பெற்றுக் கொள்கிறார்
சேக்கிழாரடிப்பொடி அவர்கள்
நூல் ஆசிரியர் வெ.கோபாலனுக்கு
சால்வை அணிவிக்கிறார்
சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர்
தி.ந.இராமச்சந்திரன் அவர்கள்
பேசுகிறார்
நூல் பதிப்பாளர் சென்னை கோமுகி பதிப்பகம்
திரு கி.முத்தையன் அவர்களுக்கு
சேக்கிழாரடிப்பொடி சால்வை அணிவிக்கிறார்
நூலைப் பெற்றுக்கொண்டு
நூல் விமர்சனம் செய்கிறார்
முனைவர் இராம.கெளசல்யா
"தி ஹிந்து" பத்திரிகையின் சிறப்புச் செய்தியாளர்
திரு ஜி. சீனிவாசன் அவர்கள்
நூல் மதிப்புரை வழங்குகிறார்
சிறப்பு விருந்தினர்களுடன்
அரசு இசைக்கல்லூரி மாணவியர்
சேக்கிழாரடிப்பொடி அவர்களுடன்
ஐயா! விழா இனிதே நடைபெற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். அந்த விழாவில் யாராவது வீடியோ பதிவு செய்து இருந்தால் அதை யூ டூபில் பதிவிறக்கம் செய்து இங்கே அதன் இணைப்பை வழங்கினீர்கள் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteஇன்னொரு வேண்டுகோளும் வைக்கிறேன்... இதுவரை பாரதியின் பல ஆக்கங்களை அவன் எழுதிய நாள், வருடம் இவைகளை குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள்... அதிலே அவனுக்கு அப்போதைய வயது என்ன என்பதையும் சேர்த்து, அதை கொஞ்சம் பெரிய எழுத்துக்களில் குறிப்பிடும் படி வேண்டிக் கொள்கிறேன்...
பாரதி என்றால் அவன் என்னமோ எண்பது வயதை தாண்டியவன், வயதானவர் என்ற ஒரு மாயையான எண்ணம் தோன்றும் அதை விலக்கும் வண்ணமாகவும், அதற்கு மேலாக முக்கியமாக அந்த சிறிய வயதில் இவ்வளவு ஞானமா!! என்று அவனின் அறிவுத்திறமையை அனைவரும் வியந்து பாராட்ட வழிவிடும் என்பதும் எனது எண்ணம்.
இவ்வளவு சிறு வயதில் இத்தனை ஞானம் கொண்ட தமிழ் கவிஞன் வேறு யாரும் இருந்திருக்கவே இல்லை என்றே தான் நினைக்கிறேன்.
பழைய அத்தனை பதிவுகளிலும் மாற்றுவது சிரமம் இருந்தும் வரும் பதிவுகளில் அதைக் குறிபிட்டால் சிறப்பு என்பது எனதுஆவல்.
நன்றிகள் ஐயா!
வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்.