கட்டுரைப் போட்டி
மகாகவி பாரதியாரின் 90ஆவது நினைவு நாள்
கருத்தரங்கக் கட்டுரைப் போட்டி
பாரதி அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு:
மகாகவி பாரதியாரின் 90ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருவையாறு பாரதி இயக்கம் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கருத்தரங்கத்தில் பங்குபெற விரும்புவோர் கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் வழியிலோ கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து கருத்தரங்கில் படிக்க ஏற்பாடு செய்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விழா திருவையாற்றில் 2011 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும்.
விதிமுறைகள்:
1. கட்டுரை சுமார் பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடிக்கும்படி A/4 அளவுள்ள காகிதத்தில் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.
2. கட்டுரை பாரதி பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது தலைப்பு பற்றி மட்டும் இருக்க வேண்டும்.
3. போட்டியின் விதிமுறைகளுக்கு பாரதி இயக்கத்தின் முடிவே இறுதியானது.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
1. மின்னஞ்சல் முகவரி:- privarsh@gmail.com
2. அஞ்சல் முகவரி: தலைவர், பாரதி இயக்கம், 19, வடக்கு வீதி, திருவையாறு
தஞ்சை மாவட்டம் 613204
மகாகவியின் நினைவு நாளில் அவனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு, அந்த யுக புருஷனின் ஒளி பொருந்திய வேதாந்த அறிவுக் கவிகடலில் விழைந்த முத்துக்களாகிய கருத்துக்களை; பாரதியின் நேசர்கள் யாவரும் கூடி பாரதி இலக்கியப் பயிலகத்தார் சபையிலே படைத்து
ReplyDeleteபரிசும், பாராட்டும் பெறும் அந்த அற்புத நிகழ்ச்சி, அமரகவியின் தொண்ணூறாவது நினைவு நாள். அன்று அந்நிகழ்வில் என்னால் கலந்துக் கொள்ள இயலாவிட்டாலும், எனது கட்டுரை வாசிக்கப் படும் என்ற பேராவலில், எனதுக் கட்டுரையை தங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ளேன் என்பதை உவகையோடு கூறிக் கொள்கிறேன்.
நன்றிகள் ஐயா!
வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.