LOVE THINE ENEMY
(September, 22, 1915)
Love thine enemy, heart of mine, Oh!
Love thine enemy.
Hast thou not seen the shining flame
Amidst the darkening smoke?
In foeman's soul lives Krishna, whom
As Love the wise invoke.
Oft we have preached to men that God
In all that is doth shine
Why, then, my heart, 'tis God that stands
Arrayed as foemen's line.
Dost know that limpid pearls are found
Within the oyster vile?
Hast seen on dunghill, too, sometimes
The starry blossom smile?
The heart that fans its wrath, shall it
The Inner Peace possess?
The honey poison-mixed, shall it
Be wholesome nevertheless?
Shall we who strive for Life and Growth,
Lend thought to Sad Decay?
'Thine evil thoughts recoil on thee',
So do the wise ones say.
When Arjun fought, 'twas Krishna whom
He faced disguised as foes;
'Twas Krishna, too, that drove his car
In charioteering pose.
Strike not the tiger threatening thee,
But love it, straight and true;
The Mother of All hath donned that garb,
Salute her there, there, too.
Love thine enemy, heart of mine, Oh!
Love thine enemy.
இந்த ஆங்கில பாடலின் பொருள் நமக்கு மிகவும் தெரிந்த தமிழ்ப் பாட்டொன்றை நினைவு படுத்துகிறதா? அது இதுதானா? படித்துப் பாருங்கள். பாரதியே ஆங்கிலத்தில் அப்படியும், தமிழில் இப்படியும் பாடியிருக்கிறான்.
பகைவனுக்கு அருள்வாய்
பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்.
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே!
பூமியில் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ? - நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே!
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே!
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே!
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவன் தானுமவன் - நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ? - நன்னெஞ்சே!
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே!
LAKSHMI (The Goddess of Wealth)
An Affirmation
Come, let us affirm the Energy of Vishnu, the Jewel of the Crimson Flower, and end this want,
Where the mind ever struggles in the fumes of paltriness,
And Reason so faints that the noblest truths do but vex her
We can endure this no more.
So let us take refuge in the feet of the Mother, Lakshmi
The discourtesies of the low, the kinship with those who have failed;
The extinction of endeavours like lamps that are drowned in a well;
The denial of fruits even when the seven seas are crossed;
To such things does want subject us, this worst of Earth's tyrannies;
Down with it.
She is born of the inner Ocean of Milk;
She is sweet like the nectar of Heaven, twin-born with here
And her shining feet repose aptly on lotus petals,
Multiple riches she holds in her hands, which are four, the Goddess whose eyes are gleaming azure;
Ruddy her form and verdant is her love,
Seated beside Love, in Heaven, on the bosom of Vishnu Himself, on the Earth her dwellings are many.
We find her revealed
In the festooned halls of marriage;
Amind flocks, and in jewelled palaces;
In the hero's arm, in the sweating toil of labour,
And, ay! on the crown of knowledge,
Extending the light of her bounties.
Come, let us sing her praises, bless her feet, and climb the heights of power;
Behold her in gold and in gems, in flower and incense;
In the lamp and the virgin's smile;
In luxuriant woodlands, groves and fields,
In the Will that dares,
And in royal lineaments.
And firm let us seat her in our minds and speech,
Her who is revealed
In underground mines,
And the slopes of the hills, ad depths of the seas,
In the righteous sacrifice;
In fame, and in talent, and novelty;
In statue and portraint, in song and in dance.
Dedicate unto her grace all knowledge that you have;
Attain to her splendours, and vanquish dire want;
Rise high in the world by joyous affirmation of Lakshmi who is revealed
In conquering armies and the traffic of the far-sighted.
In self-control, and ay! in the harmonious lays of her poet votaries.
Come, let us affirm the Energy of Vishnu, the Jewel of the Crimson Flower!
திருமகளைச் சரண் புகுதல்
மாதவன் சக்தியினைச் - செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதுமிவ் வறுமையெலாம் - எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும் - உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை - அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம்.
கீழ்களின் அவமதிப்பும் - தொழில்
கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப்போல் - செய்யும்
முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவிம்
ஏழ்கட லோடியுமோர் - பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கைக்கொடு நோய்தான் - வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?
பாற்கட லிடைப் பிறேஅந்தான் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்;
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.
நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும் - உடல்
வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.
பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.
மண்ணினுட் கனிகளிலும் - மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் உயர்'
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.
வெற்றிகொள் படையினிலும் - பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் - அல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்,
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்,
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
கருணைநல் லொளி பெறக் கலிதவிர்ப்போம்.
பாரதி பன் மொழிப் புலவன் என்பதை அறிவேன் ஆனால் அவனின் ஆங்கில கவியின் திறத்தை இங்கே உணர்ந்து இன்புற்றேன்... தமிழ் புதுக் கவிதைகளின் கர்த்தா இவன் ஆங்கில கவிதையை அதன் லட்சணம் மாறாது "ரைம்ஸ்" என்று சொல்லக் கூடியவைத் தொட்டு (எதுகை மோனைகளை ஒப்பான..) அருமையாக கைகொண்டு அற்புதமான வார்த்தைகளைக் கொண்டு கவிதைப் புனைதுள்ளான்....
ReplyDeleteFor an example; She is born of the inner Ocean of Milk;
She is sweet like the nectar of Heaven,
Its extremely awesome...
பெரும்பாலும் ஒவ்வொரு வரியுமே அது தாங்கிய சொற்களும் எதுகை மோனையோடு வருகிறது... அருமை..அருமை...
"நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும்,ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும்,எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை,"....
"அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்ருழல் பித்தர்கள்,"
இப்படி விருப்பமில்லா எண்ணத்தோடு கற்ற இவன் எப்படியெல்லாம் வடித்திருக்கிறான்... நல்லவேளை இந்த ஆங்கிலத்தை உண்மையிலே காதல் கொண்டு கற்று இருந்தான் என்றால் அந்த ஆங்கிலக் கவிகள்... ஷெல்லியும், மில்டனும், என்? சேக்ஸ்பியரும் கூட இவனிடம் தோற்றே போயிருப்பார்கள் என்பது உறுதியே.
பாரதி பல மொழி கற்றும் தமது தாய் மொழியின் மீது கொண்டிருந்த அன்பு தான் என்போன்றோர் அவனின் அமர கவிதைகளை படித்து உணர்ந்து அதிசயிக்க முடிகிறது.... அனுபவிக்க முடிகிறது... நன்றிகள் ஐயா!
வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.